< Back
மாநில செய்திகள்
மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு

தினத்தந்தி
|
11 May 2024 6:55 PM IST

ரூ.7 கோடி மதிப்பீட்டில் 2.75 ஏக்கர் பரப்பளவில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ.7 கோடி மதிப்பீட்டில் 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் இதனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கீழ்தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் இடம்பெறுகிறது. முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை மற்றும் வரவேற்பு அறை ஆகியவை இடம்பெற உள்ளது.

இந்த திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதற்காக பல்வேறு முயற்சி மேற்கொண்டும் கடந்த அரசால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், பாய்மர படகு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கவுள்ளது.

மேலும் செய்திகள்