< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய்யின் "லியோ" படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
|11 Oct 2023 3:30 PM IST
லியோ திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'லியோ' திரைப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.