< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்

தினத்தந்தி
|
26 Sept 2023 1:00 AM IST

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவு ஓசூரில் நிறுத்தப்பட்டன.

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவு ஓசூரில் நிறுத்தப்பட்டன.

முழு அடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதை கண்டித்து கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நேற்று இரவு 8 மணி முதல் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

ஓசூர் பணிமனையில்...

அதேபோல பெங்களூரு சென்ற பஸ்களும் மீண்டும் இரவு ஓசூர் வந்து அங்குள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டன. இன்று பெங்களூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் பரிதவித்தனர்.

பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் முடிவடைந்ததும் தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்