< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு அரசின் விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசின் விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தினத்தந்தி
|
13 Jan 2024 6:53 PM IST

விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது .

2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கும் , பெருந்தலைவர் காமராஜர் விருது .உ. பலராமனுக்கும் வழங்கப்பட்டது.

மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுக்கும், தமிழ்த்தென்றல் வி.க. விருது பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கும் , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் கருணாநிதிக்கும் வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் .சுப.வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது பி. சண்முகத்திற்கும் வழங்கப்பட்டது..

மேலும் செய்திகள்