< Back
மாநில செய்திகள்
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் - 5 பேருக்கு தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் - 5 பேருக்கு தமிழக அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
26 Jan 2023 7:57 AM IST

குடியரசு தினத்தையொட்டி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

குடியரசு தினத்தையொட்டி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமை காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஶ்ரீ கிருஷ்ணன், தஞ்சை செல்வம் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்படுகின்றன. திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு முதல் பரிசு, திருச்சிகோட்டை காவல் நிலையத்துக்கு இரண்டாம் பரிசு, திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, தஞ்சை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயமோகன், சேலம், விழுப்புரம் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் சகாதேவன், இனாயத் பாஷா, செங்கல்பட்டு அயல்பணி நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் சிவனேசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்