< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
|26 Sept 2023 12:15 AM IST
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டடிருந்தது. கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசின் திட்டங்களை வழங்கியதின் புகைப்படங்களுடன், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர், கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தன.உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.