< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; ராமேஸ்வரத்தில் 2-வது நாளாக தொடர் போராட்டம்
|7 Nov 2023 10:23 PM IST
இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம்,
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்கள் மற்றும் 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும், இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.