< Back
மாநில செய்திகள்
தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. திடீர் ஆய்வு
மதுரை
மாநில செய்திகள்

தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
29 Jun 2022 2:43 AM IST

மதுரை அலுவலகத்தில் தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. திடீர் ஆய்வு நடத்தினார்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி. பி.கே.ரவி நேற்று முன்தினம் மதுரை வந்திருந்தார். அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தீயணைப்பாளர்களுக்கு மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் தீயணைப்பு, உயிர்மீட்பு பணிகளில் பயன்படும் சிறப்பு உபகரணங்களை பார்த்தார்.. அதை தொடர்ந்து தென் மண்டல தீயணைப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அதன் பின்னர் தீயணைப்பு துறைக்கு பணியாளர்கள் பயிற்சி மையம் கட்ட இடையப்பட்டியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள இடத்தை நேரில் சென்று பார்த்தார். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மதுரை மாவட்ட அதிகாரி வினோத், தேனி மாவட்ட அதிகாரி கல்யாணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்