< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

தினத்தந்தி
|
15 Feb 2023 3:14 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, இன்று காணொலி காட்சி வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வழங்குதல், தேர்தல் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்