< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்
|2 Nov 2022 1:57 AM IST
நெல்லையில் தமிழ்நாடு நாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழ் சான்றோர் பேரவை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் பட்டாசு வெடித்தும், மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். விழாவில் தமிழ் சான்றோர் பேரவை சுதர்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல்ஜபார், மாநில செயலாளர் உமர்பாரூக், மாவட்ட செயலாளர் ஜமால் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.