< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்
|18 July 2022 11:22 PM IST
திண்டுக்கல் மாநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மேற்குரதவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதியார், காமராஜர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு குறித்து பேச்சு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயந்திபிளாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.