< Back
மாநில செய்திகள்
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும்

தினத்தந்தி
|
11 July 2023 12:17 AM IST

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. கட்சியை விட நமது மாநிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம். விவசாயிகள் பாதிக்க கூடாது என்பதில் தமிழக காங்கிரஸ் உறுதியாக இருக்கும். மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும். ராகுல் காந்தி நடைபயணத்தை அண்ணாமலை நடைபயணத்தோடு ஒப்பிடக்கூடாது. பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1,000 கொடுப்பதில் ஏழை, எளியவர்கள் பயன்பெறுவார்கள். மாநில அரசை மத்திய அரசு நேரடியாக கலைக்க முடியாது. ஆனால் மாநில அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு முடக்க நினைக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் மெர்சி ரம்யா, எம்.பி.க்கள் அப்துல்லா, ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் சின்னத்துரை, ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்