< Back
மாநில செய்திகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை முதல் 4 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம்
மாநில செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை முதல் 4 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
2 March 2024 7:35 PM IST

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்மையில் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை முதல் 4 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை(நாளை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை(நாளை மறுநாள்) தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து அன்றைய தினம் கன்னியாகுமரியில் உலக மகளிர் தின மாநாட்டில் செல்வப்பெருந்தகை பங்கேற்க உள்ளார். இதையடுத்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்த உள்ளார்.



மேலும் செய்திகள்