< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக காங்கிரஸ் நிர்வாகிக்கு கத்திக்குத்து - 4 பேர் கைது
|28 Oct 2022 9:12 PM IST
தமிழக காங்கிரஸின் ஆர்.டி.ஐ பிரிவு மாநில செயலாளரை கத்தியால் தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழக காங்கிரஸின் ஆர்.டி.ஐ பிரிவு மாநில செயலாளரை கத்தியால் தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு மாநில செயலாளராக அப்ரோஸ் அகமது என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை பெரியமேடு பகுதியிலுள்ள அப்ரோஸ் அகமதுவின் சாமியானா பந்தல் போடும் நிறுவனத்திற்குள் நுழைந்த 4 பேர் அவரை கத்தியால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து அப்ரோஸ் அகமதுவை தாக்கிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.