< Back
மாநில செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் அணை கட்டக் கூடாது - ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம்
மாநில செய்திகள்

"கொசஸ்தலை ஆற்றில் அணை கட்டக் கூடாது" - ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம்

தினத்தந்தி
|
13 Aug 2022 4:55 PM IST

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டுமென ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டுவதற்கான நடவடிக்கையை ஆந்திர அரசு எடுத்துள்ளது.

இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என ஆந்திர முதல் மந்திரிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வளம் பாதிக்கும் என்பதால், அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசினை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொசஸ்தலை ஆற்றில் இருந்து தான் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தற்போது ஆந்திர அரசு இரு அணைகள் கட்டினால், சென்னைக்கான குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலில் ஆந்திர முதல் மந்திரிக்கு இந்த கடிதத்தினை எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்