< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை...!
|25 Oct 2023 8:28 AM IST
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை,
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.