< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாபெரும் 7 தமிழ்க்கனவு என்ற தலைப்பில் தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள்
|18 Feb 2024 10:00 PM IST
7 தலைப்புகளில் பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் நாளை திங்கட்கிழமை 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் 7 மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதாவது, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.