< Back
மாநில செய்திகள்
தமிழக பட்ஜெட் 2024-25: ஒரு ரூபாயில் வரவு-செலவு எவ்வளவு? முழு விவரம்
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2024-25: ஒரு ரூபாயில் வரவு-செலவு எவ்வளவு? முழு விவரம்

தினத்தந்தி
|
19 Feb 2024 7:29 PM IST

தமிழக அரசின் கடன் அளவு ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 361.80 கோடி என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை உரையை வாசித்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. பட்ஜெட்டில் தமிழக அரசின் வருவாய் -செலவினம் குறித்த விவரமும் இடம் பெற்று இருந்தது. பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு- செலவு விவரம் குறித்த விவரம் வருமாறு:

வரவு:

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாக 43.4 சதவீதமும், பொதுக்கடன் மூலமாக 32.4 சதவீதமும், மத்திய வரிகளின் பங்கு மூலமாக 11.1 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலமாக 6.8 சதவீதமும், மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் மூலமாக 5.2 சதவீதமும், கடன் வசூல் மற்றும் மூலதன வரவு மூலமாக 1.1 சதவீதம் வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கிறது.

செலவு:

உதவி தொகைகள் மற்றும் மானியங்களுக்காக 32.4 சதவீதமும், சம்பளங்களுக்காக 18.7 சதவீதமும், வட்டி செலுத்துவதற்காக 14.1 சதவீதமும், மூலதன செலவாக 10.5 சதவீதமும், கடன்களை திருப்பி செலுத்துவதற்காக 9.1 சதவீதமும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்களுக்காக 8.3 சதவீதமும், கடன் வழங்குவதற்காக 3.6 சதவீதமும், செயல்பாடுகளும் பராமரிப்புகளுக்காக 3.3 சதவீதமும் செலவு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்