< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி
|28 July 2022 10:40 PM IST
சென்னைக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
சென்னை,
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஜோதி ஏற்றி பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து, சென்னை கவர்னர் மாளிகையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், 2024-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பிரதிநிதித்துவம் பெறுவது குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.