< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கரூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயண பிரசார பேனர்கள் அகற்றம்
|3 Nov 2023 1:27 PM IST
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை கரூரில் நடைபயண பிரசாரம் மேற்கொள்கிறார்.
கரூர்,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை அண்ணாமலை கரூரில் நடைபயண பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக கரூரில் பாஜக சார்பில் நடைபயண பிரசார பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை மாநகராட்சி மேயர், துணை மேயர் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் பேனர்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.