< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு..!!
|29 May 2022 11:10 AM IST
துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்தை தொடர்ந்து ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
ஜெர்மனியில் நாளை முதல் ஜூன் 2ஆம் தேதிவரை நடைபெறும் 'Hannover Messe -2022' தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கம் இடம்பெறுகிறது.
ஆற்றல், உற்பத்தி, நெட்வொர்க்கிங், லாஜிஸ்டிக் துறைகளில் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக 192 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கண்காட்சி கடந்த மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.