< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
27 மையங்களில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு
|16 Oct 2023 1:20 AM IST
27 மையங்களில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் 15 மையங்களிலும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும் ஆக மொத்தம் 27 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வில் தமிழ் இலக்கியத்தில் 100 கேள்விகள் கேட்கப்படும். மாவட்டத்தில் 3,433 மாணவர்களும், 5,147 மாணவிகளும் ஆக மொத்தம் 8,580 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் நேற்று 3,204 மாணவர்களும், 4,978 மாணவிகளும் ஆக மொத்தம் 8,182 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.227 மாணவர்களும், 171 மாணவிகளும் ஆக மொத்தம் 398 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் தெரிவித்தார்.