< Back
மாநில செய்திகள்
ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது - மத்திய அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மாநில செய்திகள்

ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது - மத்திய அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தினத்தந்தி
|
12 Dec 2023 2:59 AM IST

காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழியாக்கி, ஆங்கிலத்தை இந்தியாவில் திணித்ததாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான இளைஞர்களின் குரல் என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநில வாரியாக கவர்னர் மாளிகை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, 20 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அறிவியல் சொற்றொடரிலும், இலக்கண வளத்திலும் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழே சிறந்தது என பேசிய கவர்னர், காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழி எனக்கூறி அறிவியலை பயிற்றுவிக்கும் விதத்தில் இந்தியாவில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்