< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் - தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை
|23 May 2023 3:25 PM IST
தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பயிற்று மொழியாக உள்ளது. அதே சமயம் சில தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்று மொழியாக இல்லை என புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தனியார் பள்ளிகளின் இயக்குனர் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக படிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அரசின் திட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.