< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு...!
|1 Oct 2022 11:26 AM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உறவினரை தாக்கியதாக புகாரின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறவினரை ஐ.ஏ.எஸ் அதிகாரியும், அறநிலையத்துறை கூடுதல் ஆணையருமான கண்ணன் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, உறவுக்கார பெண் விஜயலெட்சுமி என்பவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் கே.அழகிரியின் உறவினரை தாக்கியதாக 4 மணி நேர விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மீது அசோக்நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.