< Back
மாநில செய்திகள்
திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது, தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் -  எச்.ராஜா
மாநில செய்திகள்

திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது, தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா

தினத்தந்தி
|
27 Jan 2023 1:33 PM IST

ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ என்ற கணித முறைப்படி தான் கமலஹாசனின் ஆதரவு காங்கிரசுக்கு அமையும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

திருச்செந்தூர்,

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை வந்து விட்டது.

தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள். இதனால் மக்கள் திமுக பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள். எனவே எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரிய வேண்டும். காங்கிரசுக்கு கமல் ஹாசனின் ஆதரவு குழப்பத்தை தான் தரும். ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ தான் என்ற கணித முறைப்படி தான் கமலஹாசனின் ஆதரவு அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்