தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை மேலும் 3 மாதம் நீட்டிப்பு
|தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த வாரந்திர சிறப்பு ரெயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28, நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.