< Back
மாநில செய்திகள்
தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
27 May 2024 12:50 AM IST

கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வரும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) வரும் ஜூன் 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.25 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) வரும் ஜூன் 3-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06043) வரும் ஜூன் 5-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06044) வரும் ஜூன் 6-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்