< Back
மாநில செய்திகள்
தாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தினத்தந்தி
|
4 May 2023 3:04 PM IST

தாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத் துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

மருத்துவக் கழிவுகள்

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தேங்கும் மருத்துவ கழிவுகளை அதற்கென உள்ள நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் இந்த உத்தரவை மீறி சில ஆஸ்பத்திரியில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தும்போது பயோ கெமிக்கல் கழிவை அதில் கலந்து விடுகின்றனர்.

அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை எடுக்க செல்லும் போது குப்பையுடன் மருத்துவ கழிவுகள் கலந்து கொடுத்துள்ளனர்.

ரூ.1 லட்சம் அபராதம்

இதுகுறித்த புகாரின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் குப்பைகளை ஆய்வு செய்ததில் வழக்கமாக வழங்கப்படும் குப்பைகளில் ஏராளமான மருத்துவ கழிவுகள் கலந்து இருப்பது தெரியவந்தது.

விதிமுறையை மீறி மருத்துவக் கழிவுகளை குப்பைகளில் கலந்து அளித்த ஆஸ்பத்திரிக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மருத்துவக் கழிவுகளை குப்பைகளில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்