< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இலங்கை மீனவ அமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: கனிமொழி எம்.பி
|28 Oct 2023 9:30 PM IST
தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதியுள்ளேன்.
இலங்கை மீனவ அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்க முடியாத சூழல் உள்ளது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினாலே இந்த பிரச்சினைக்கு தீர்வை காண முடியும். " இவ்வாறு அவர் பேசினார்.