< Back
மாநில செய்திகள்
சூடுபிடிக்கும் அரசியல் களம்: வருகிற 28-ம் தேதி திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தை
மாநில செய்திகள்

சூடுபிடிக்கும் அரசியல் களம்: வருகிற 28-ம் தேதி திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
24 Jan 2024 9:49 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி பணிகளை ஒருங்கிணைக்க திமுக 3 குழுக்களை சமீபத்தில் அமைத்தது.

இதையடுத்து திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக வருகிற 28-ம் தேதி திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவினர் காங்கிரஸ் கமிட்டி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே தொகுதிகளை இந்த முறை காங்கிரஸ் கட்சி கேட்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

மேலும் செய்திகள்