< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி-நகை பறிப்பு
|7 July 2023 1:07 AM IST
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி-நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
முசிறி:
முசிறி அருகே உள்ள தெற்கு நல்லியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 35). இவருக்கு தண்டலைப்புத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டம் மற்றும் வீடு உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் சம்பவத்தன்று இரவு ராஜ்குமாரின் மனைவி முத்தமிழ் (30) தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் முத்தமிழ் காதில் இருந்த கால் பவுன் தோடு மற்றும் கழுத்தில் தாலிக்கயிற்றில் இருந்த ஒன்றரை பவுன் தாலி, குண்டு உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து முத்தமிழ், முசிறி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.