ராணிப்பேட்டை
தளவாய்பட்டறை- கேசவனாங்குப்பம் சாலையை சீரமைக்க வேண்டும்
|தளவாய்பட்டறை- கேசவனாங்குப்பம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட தளவாய்ப்பட்டடையில் இருந்து கேசவனாக்குப்பம் வரை உள்ள தார்சாலை போடப்படட்டு பல வருடங்களாகிறது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தார்சாலை முழுவதும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என பல முறை துறை சார்ந்த அலுவலர்களுக்கு இப்பகுதி மக்கள் தெறிவித்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.