< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து கைவரிசை: வீடு புகுந்து 20 பவுன் தங்க நகைகள் திருட்டு
|8 July 2022 9:14 AM IST
சென்னை கொளத்தூரில் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து வீடு புகுந்து 20 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
சென்னை கொளத்தூர் ராஜன் நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 63). இவர், சென்னை பட்டரவாக்கத்தில் இரும்பு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய மகள் சங்கீதா(30), பேத்தி ஹர்ஷிதா(11) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சாவியை அறையில் வைத்து விட்டு படுக்கை அறையில் சென்று தூங்கி விட்டனர். நள்ளிரவில் மர்ம ஆசாமி, ஜன்னல் வழியாக இரும்பு கம்பியால் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பீரோவை திறந்து அதி்ல் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டார். இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.