< Back
மாநில செய்திகள்
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: உறவினர்கள் கோரிக்கை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: உறவினர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
23 Aug 2022 9:32 PM IST

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நாகை,

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்டு தர வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்