< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பொறுப்பேற்பு
|20 May 2023 1:46 AM IST
முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்று கொண்டார்.
பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த அறிவழகன் விழுப்புரத்திற்கும், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பெரம்பலூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மணிவண்ணன் நேற்று காலை தனது அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டாா். முன்னதாக அவர் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பள்ளிக்கல்வித்துறையினர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.