< Back
மாநில செய்திகள்
மகளிர் குழுவினருக்கு தையல் பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மகளிர் குழுவினருக்கு தையல் பயிற்சி

தினத்தந்தி
|
15 July 2022 5:28 PM GMT

சங்கராபுரம் அருகே மகளிர் குழுவினருக்கு தையல் பயிற்சி

சங்கராபுரம்

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சிறப்பு தையல் எம்பிராய்டிங் பயிற்சி சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் யாழினி, ஊராட்சி செயலாளர் பிரகாஷ், தன்னார்வலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார அணித்தலைவர் ஏழுமலை வரவேற்றார். செயல் அலுவலர் பிரசன்னா திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கி பேசினார். இதில் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்