< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம்
|23 Feb 2023 11:22 PM IST
தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொறுப்பு தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தனி நல வாரியம் வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் ரூ.3000 ஆக உயர்த்தி தர வேண்டும். வருகிற 27-ந் தேதி தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு கிளைகள் தோறும் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, முடிவுகளை மாநில துணை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ராஜாபெரியசாமி நன்றி கூறினார்.