< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
உத்திரமேரூரில் கால்வாயில் தவறி விழுந்த தையல்காரர் சாவு
|22 Aug 2022 6:21 PM IST
உத்திரமேரூரில் கால்வாயில் தவறி விழுந்த தையல்காரர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கம்மாளர் தெருவில் வசிப்பவர் முத்து இவரது மகன் கோபி (வயது 35). தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் உத்திரமேரூர்- காஞ்சீபுரம் சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே இவர் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.