< Back
தமிழக செய்திகள்

திருவள்ளூர்
தமிழக செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 மாத சம்பளம் தர கோரி தாசில்தார், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

15 Jun 2023 5:49 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 மாத சம்பளம் தர கோரி தாசில்தார், அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டையில் புதிதாக தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இங்கு பணியாற்றி வரும் தாசில்தார் உள்பட மற்ற அலுவலர்களுக்கு சரியான முறையில் சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பணியாற்றி வரும் தாசில்தார், துணை தாசில்தார், தட்டச்சர், இளநிலை உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய 5 பேருக்கு கடந்த 12 மாத காலமாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகம் முன்னால் வேலை நேரம் முடிந்த பிறகு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பளம் வழங்க உடனடி நடவடிக்கை வேண்டும் என முழக்கமிட்டனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.