< Back
மாநில செய்திகள்
சின்னசேலத்தில் தாசில்தார் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலத்தில் தாசில்தார் பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
28 July 2023 12:15 AM IST

சின்னசேலத்தில் தாசில்தார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சின்னசேலம்,

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த இந்திரா கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனி துணை தாசில்தாராக பணியாற்றி வந்த ஜெ.கமலக்கண்ணன் சின்னசேலம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு அங்கிருந்த தனி தாசில்தார்கள் ரகோத்மன், கமலம், மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மணி, வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்