< Back
மாநில செய்திகள்
குன்றத்தூரில் பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூரில் பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
8 May 2023 2:05 PM IST

குன்றத்தூரில் பணிகள் முடிந்த பின்னரும் திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிய கட்டிடத்தில்

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக மாவட்டங்களும், தாலுகாக்களும் உருவாக்கப்பட்டது இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் தாலுகா புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில் குன்றத்தூர், மாங்காடு மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனர்.

குன்றத்தூர் நான்கு சாலை சந்திப்பில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக சிறிய கட்டிடத்தில் குன்றத்தூர் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.போதிய இடவசதி இல்லாததால் தினந்தோறும் பொதுமக்கள் இங்கு வந்து செல்ல கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதுமட்டுமின்றி ஆவணங்களை பாதுகாப்பதும் கடும் சிரமம் ஏற்பட்டது.

தாசில்தார் அலுவலகம்

இதையடுத்து தற்போதைய தி.மு.க. ஆட்சியில் குன்றத்தூர், மேத்தா நகர் பகுதியில் புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முழுமையாக முடிந்து கட்டிடம் திறப்பு விழாவை எதிர்நோக்கி உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் போக்குவரத்து வசதி இல்லாத பகுதியில் தற்போது புதிய தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்