< Back
மாநில செய்திகள்
தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

தினத்தந்தி
|
28 Aug 2023 3:42 AM IST

தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

திருச்சி மாவட்ட தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் பெரியார் தேக்வாண்டோ கிளப் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை குழுமணி தேக்வாண்டோ கிளப்பும், 3-வது இடத்தை மாஸ் தேக்வாண்டோ கிளப்பும் பிடித்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச நடுவர் கணேசன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுபசோமு, அண்ணா பல்கலைக்கழக டீன் செந்தில்குமார், பனானா லீப் ரெஸ்டாரண்ட் அமைப்பு தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்