திருநெல்வேலி
பள்ளிக்கூடத்திற்கு மேஜை, இருக்கைகள்
|பள்ளிக்கூடத்திற்கு மேஜை, இருக்கைகள் வழங்கப்பட்டது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர். இதனைப் பார்த்த வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவரும், மேக்ரோ கல்வி நிறுவனத்தின் தலைவருமான பொன்தங்கதுரை, பள்ளிக்கு மேஜை, இருக்கைகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து முதற்கட்டமாக ரோட்டரி சங்கத்தின் சார்பில் 4, 5-ம் வகுப்புகளுக்கு இருக்கை, மேஜை வழங்கும் விழா நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார். மேலும் மூத்த உறுப்பினர் ரவி, செயலர் சுதிர் கந்தன், உறுப்பினர்கள் முத்துசாமி, ஆபிரகாம், அழகன், ஹரிஷ், பள்ளியின் முன்னாள் மாணவர் வலங்கை புலி, ரமேஷ் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த உதவிக்கு ரோட்டரி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.