< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரியில்மாவட்ட நீச்சல் போட்டிகள்400 மாணவர்கள் பங்கேற்பு
|12 Oct 2023 1:00 AM IST
தர்மபுரியில் மாவட்ட அளவில் நீச்சல் போட்டிகள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் தர்மபுரி செந்தில்நகர் ராஜாஜி நீச்சல் குளத்தில் நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை, பிரஸ்ட் ஸ்ட்ரோக், மீட் ரிலே, இண்டுவிஜூவல் ரிலே உள்ளிட்ட 17 வகையான பிரிவுகளின் நீச்சல் போட்டிகள் நடந்தன. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை 20 உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்று நடத்தினர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிச, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகிறார்கள்.