< Back
மாநில செய்திகள்
வேலகவுண்டம்பட்டி அருகே  தனியார் நிறுவன ஊழியர் மர்மசாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்மசாவு

தினத்தந்தி
|
22 Aug 2022 11:17 PM IST

வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்மசாவு

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நத்தம்பூண்டி சமயபுரம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 41). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கலைவாணி (35). இவர் மாணிக்கம் பாளையத்தில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கருணாகரன் வீட்டிற்கு வெளியே இருந்த கம்பியில் துணிகளை காய வைப்பதற்காக சென்றார். அப்போது துணிகளை காயப்போட்டு கொண்டு இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதனால் காயம் அடைந்த கருணாகரனின் சத்தம் கேட்டு மனைவி கலைவாணி வெளியே ஓடி சென்று பார்த்தார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த கணவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கருணாகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் கருணாகரனின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருணாகரன் மர்மசாவு குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்