< Back
மாநில செய்திகள்
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக புகார்:  மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீசார் 2 பேர் பணியிடை நீக்கம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக புகார்: மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீசார் 2 பேர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
7 Oct 2022 6:45 PM GMT

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக புகார் வந்ததை அடுத்து மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீசார் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் மதுபான வகைகள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தாமஸ்முருகன், முதல்நிலை போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, போலீஸ் ஏட்டு தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்