< Back
மாநில செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
சேலம்
மாநில செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
9 Aug 2022 1:34 AM IST

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சேலம் மாநகர பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு சில போலீசார் உடந்தையாக இருப்பதாக போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவிற்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் செவ்வாய்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன், போதைப்பொருட்கள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்