< Back
மாநில செய்திகள்
வனக்காப்பாளர் பணி இடைநீக்கம்
சேலம்
மாநில செய்திகள்

வனக்காப்பாளர் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
20 July 2022 1:25 AM IST

வனப்பகுதியில் மரங்கள் வெட்டிய விவகாரத்தில் வனக்காப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்குட்பட்ட ஏற்காடு வனப்பகுதியில் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து குப்பனூர்- ஏற்காடு மலைப்பாதையில் பிரதான சாலைக்கு வர வசதியாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனத்திற்குள் புதிய சாலை அமைக்க அந்த பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிய விவகாரத்தில் சேர்வராயன் வனச்சரகத்தில் பணியாற்றி வரும் வனத்துறை ஊழியர்கள் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பணியாற்றிய வனக்காப்பாளர் குமாரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்