< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடை நீக்கம்
|16 July 2023 10:33 PM IST
பள்ளி மாணவர்கள் வாந்தி-மயக்கம் அடைந்ததை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர், உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
வாணாபுரம்
வெறையூர் அருகே உள்ள தண்டரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
மேலும் பெற்றோர்கள் பள்ளி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்
இதனையடுத்து பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் சியாமளா (வயது 45), உதவியாளர் மஞ்சுளா (42) ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.